டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்கு கவனம் தேவை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்கி வரும் நிலையில், இந்திய அணி தனது டெஸ்ட் தொடர்களில் சறுக்காமல் கவனமுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


துபை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்கி வரும் நிலையில், இந்திய அணி தனது டெஸ்ட் தொடர்களில் சறுக்காமல் கவனமுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
ஐசிசியின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா தற்போது 114 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 116.46 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூஸிலாந்து 116.37 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளன. 
சமீபத்தில் நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய நியூஸிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு அருகாமையில் உள்ளது. வரும் 26-ஆம் தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக (2-0) கைப்பற்றும் பட்சத்தில், நியூஸிலாந்து தரவரிசையில் முதலிடம் பிடிக்கும். 5 தொடர்களில் இருந்து அந்த அணி 420 புள்ளிகள் பெற்றிருக்கும். 
அப்படி நடந்தால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வரும் 8 ஆட்டங்களில் இந்தியா 5 அல்லது 4 வெற்றிகளை பதிவு செய்து, 3 ஆட்டங்களை டிரா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். நடப்பு தொடரில் இந்தியாவின் ஆட்டம், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நியூஸிலாந்தின் ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவின் நிலை இறுதி செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. 
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் அணிகள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் இப்போட்டிக்கு அணிகள் தகுதிபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com