இரு கேட்சுகளை நழுவ விட்ட இந்தியா: 2-ம் நாள் முதல் பகுதியில் ஆஸ்திரேலியா 35/2

வேட், பர்ன்ஸ் ஆகிய இருவரையும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா.
பும்ரா
பும்ரா

இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முதல் பகுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பகலிரவுப் போட்டியாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் அறிமுக வீரராக களம் கண்டாா்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தோ்வு செய்தாா். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சோ்த்தது. 

இந்திய அணி குறைந்தபட்சம் 275 ரன்களாவது சேர்க்கும் என்கிற நம்பிக்கை வீணானது. மீதமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் 11 ரன்களுக்குள் இழந்தது இந்தியா. நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த அஸ்வின் 15 ரன்களிலும் சஹா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். பிறகு உமேஷ் யாதவ் 6 ரன்களும் ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இன்று 4.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முடித்தது ஆஸ்திரேலியா.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 93.1 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான பர்ன்ஸும் மேத்யூ வேடும் நிதானமாக விளையாடினார்கள். 14 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தார்கள். எனினும் வேட், பர்ன்ஸ் ஆகிய இருவரையும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா. இருவரும் தலா 8 ரன்கள் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முதல் பகுதியில் 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. லபுசானே 16 ரன்கள், ஸ்மித் 1 ரன் என களத்தில் உள்ளார்கள். லபுசானே அளித்த இரு கேட்சுகளை சஹாவும் பும்ராவும் நழுவ விட்டார்கள். இல்லாவிட்டால் இந்திய அணி முதல் பகுதியில் குறைந்தது மூன்று விக்கெட்டுகளை எடுத்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com