2011 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் என்னை மதிக்கவில்லை: சோயிப் அக்தர்

ன்னைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் அதற்கு முன்பே ஓய்வு அறிவிப்பை நான் வெளியிட்டு விட்டதால்...
2011 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் என்னை மதிக்கவில்லை: சோயிப் அக்தர்

2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தன்னை மதிக்கவில்லை என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிா் சா்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மனரீதியாக துன்புறுத்துவதால் ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளாா்.

அமிரின் ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தன்னுடைய யூடியூப் சேனலில் கூறியதாவது:

2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது, அப்ரிடி அல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் என்னை மதிக்கவில்லை. இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். என்னைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் அதற்கு முன்பே ஓய்வு அறிவிப்பை நான் வெளியிட்டு விட்டதால் அதைப் பற்றி கவலைப்படவில்லை. 

அமிர் நன்குப் பந்துவீசி, தனது பங்களிப்பை அதிகரித்திருக்க வேண்டும் இதன்மூலம் அவரை யாரும் வெளியேற்றியிருக்க முடியாது. நன்கு விளையாடி அச்சத்தையும் நிர்வாகத்தையும் எதிர்கொள்ள வேண்டும். 

அமிரை என்னிடம் தந்தால் அடுத்த இரு மாதங்களில் அவர் மணிக்கு 150 கி.மீ. வேகத்துக்குப் பந்துவீசச் செய்வேன். அவரால் மீண்டும் அணிக்குத் திரும்ப முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com