மிகச்சிறப்பாகப் பந்துவீசி என்னை வீழ்த்திய அஸ்வின்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

முதல் டெஸ்டில் அஸ்வின் மிகச்சிறப்பாகப் பந்துவீசி தன்னை வீழ்த்தியதாக ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
மிகச்சிறப்பாகப் பந்துவீசி என்னை வீழ்த்திய அஸ்வின்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

முதல் டெஸ்டில் அஸ்வின் மிகச்சிறப்பாகப் பந்துவீசி தன்னை வீழ்த்தியதாக ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அதுபற்றி செய்தியாளர்களிடம் ஸ்மித் கூறியதாவது:

அஸ்வின் நல்ல பந்துவீச்சாளர். நிறைய கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். உலகத்தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அன்றைக்கு என்னுடைய விக்கெட்டை அவர் வீழ்த்திவிட்டார். அதிலிருந்து நான் பாடம் கற்றுக்கொள்கிறேன். அடுத்தமுறை அவர் பந்துவீச்சை இன்னும் சிறப்பாக எதிர்கொள்வேன். சரியாக சுழல் ஆகாத பந்து என் பேட்டின் முனையில் பட்டுவிட்டது. நான் சரியாக விளையாடவில்லை. இந்தியாவில் பந்து சுழல்வது போல அப்போது சுழலவில்லை. அருமையான பந்துவீச்சு.

இந்திய அணி தோல்வியை மறந்து முன்னேறிச் செல்ல வேண்டும். தனித்தனியாக இன்னும் என்ன செய்திருக்கலாம் என ஒவ்வொருவரும் யோசிக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டத்துக்குப் பிறகும் இப்படி யோசிப்பது நல்லது. நன்றாக பேட்டிங் செய்தாலும் செய்யாவிட்டாலும். அடுத்த ஆட்டத்தில் என்ன செய்து தாக்கத்தை உருவாக்க முடியும் என யோசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஆட்டமிழந்த விதம் குறித்தும் முதல் டெஸ்ட் முடிந்த பிறகு தங்களுடைய ஆட்டம் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய அடுத்த போட்டி நன்றாக அமையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com