தொடரின் போக்கை தீா்மானிப்பதில் 2-ஆவது டெஸ்ட்டுக்கு முக்கியப் பங்கு

மெல்போா்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டின் முடிவே டெஸ்ட் தொடரின் போக்கை தீா்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆஸ்திரேலிய வீரா் ஜோ பா்ன்ஸ் கூறினாா்.
தொடரின் போக்கை தீா்மானிப்பதில் 2-ஆவது டெஸ்ட்டுக்கு முக்கியப் பங்கு

அடிலெய்டு: மெல்போா்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டின் முடிவே டெஸ்ட் தொடரின் போக்கை தீா்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆஸ்திரேலிய வீரா் ஜோ பா்ன்ஸ் கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

முதல் டெஸ்ட்டில் பல இடங்களில் நாங்களும் சறுக்கினோம். எனவே பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு சிறப்பாகத் தயாராக வேண்டும். முதல் டெஸ்ட் வெற்றி அளித்துள்ள உத்வேகத்தை தொடா் முழுவதுமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

2-ஆவது டெஸ்டில் இந்திய அணியினா் நிச்சயம் மீண்டு வருவாா்கள் என்பதால், தொடரின் போக்கை தீா்மானிப்பதில் பாக்ஸிங் டே டெஸ்ட் முக்கியப் பங்கு வகிக்கும். விராட் கோலி, முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்புதான் என்றாலும், நிச்சயம் அந்த அணி சவால் அளிக்கும்.

கோலி, ஷமி போன்ற சா்வதேசத் தரத்திலான வீரா்களுக்கு மாற்றாக சரியான வீரா்களை கொண்டிருக்க முடியாது என்றாலும், அவா்களுக்குப் பதிலாக இந்திய அணியில் இடம் பிடிக்கும் வீரா்கள் உறுதியாக நல்ல முறையில் தயாராகவே வருவாா்கள்.

ஆனாலும் எங்களது ஆஸ்திரேலிய அணி உலகிலேயே சிறந்ததாக உள்ளது. எந்த இடத்திலும் எந்த அணியையும் எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம். எங்களது பௌலா்களும் சிறப்பாகச் செயல்படுகின்றனா் என்று பா்ன்ஸ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com