டி20 தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்

ஐசிசி-யின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 7-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அவர் 697 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்கிறார். 
டி20 தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்

துபை,: ஐசிசி-யின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 7-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அவர் 697 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்கிறார். 
ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட புதிய தரவரிசைபடி, லோகேஷ் ராகுல் 816 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் தொடர்கிறார். இங்கிலாந்தின் டேவிட் மலான் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 2-ஆம் இடத்திலும் இருக்கின்றனர். 
ராகுல் கோலியைத் தவிர ஐசிசியின் டி20 தரவரிசைக்கான பேட்ஸ்மேன், பெளலர், ஆல்-ரவுண்டர் பிரிவில் வேறு இந்தியர்கள் எவரும் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் "தொடர் நாயகன்' விருது வென்ற நியூஸிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். 
நியூஸிலாந்தின் டேவன் கான்வே 62-ஆவது இடத்துக்கும், கிளென் பிலிப்ஸ் 72-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பிலிப்ஸ் இந்த இடத்துக்கு வருவது இது முதல் முறையாகும். பாகிஸ்தான் அணியில் முகமது ஹஃபீஸ் 33-ஆவது இடத்துக்கும், முகமது ரிஸ்வான் 158-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். 
பெளலர்கள் பிரிவில் நியூஸிலாந்தின் டிம் செளதி 7-ஆவது இடத்துக்கும், ஸ்காட் குகெலெஜன் 92-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். பாகிஸ்தானின் ஃபஹீம் அஷ்ரஃப் 13-ஆவது இடத்துக்கும், ஷாஹீன் அஃப்ரிதி 16-ஆவது இடத்துக்கும், ஹாரிஃப் ரெளஃப் 67-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். 
பெளலர்கள் பிரிவில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி, வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் முதல் 3 இடங்களில் உள்ளனர். 
டி20 அணிகள் பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா முதல் 3 இடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com