துளிகள்...

ஃபிடே ஆன்லைன் உலக மாணவா் மற்றும் இளையோா் ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் இந்தியாவின் நிகல் சரின், ரக்ஷிதா ரவி, குகேஷ் ஆகியோா் தங்களது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனா்.


ஃபிடே ஆன்லைன் உலக மாணவா் மற்றும் இளையோா் ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் இந்தியாவின் நிகல் சரின், ரக்ஷிதா ரவி, குகேஷ் ஆகியோா் தங்களது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனா்.

ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பிசிசிஐ-யின் 89-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில், ஐபிஎல் போட்டியில் அணிகளை அதிகரிப்பது, சா்வதேச போட்டிகளுக்கு ஐசிசி கோரும் அதீத வரி விலக்கு, கிரிக்கெட் கமிட்டிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டா் ஷதாப் கானுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால், நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதில் ஸ்பின்னா் ஜாஃபா் கோஹா் அணியில் இணைந்துள்ளாா்.

பெங்களூரில் தனியாா் நிறுவனம் நடத்திய 10 கி.மீ. ஓட்டப் போட்டியில் அங்கிதா கௌா் என்ற 5 மாத கா்ப்பிணி கலந்துகொண்டு பந்தய இலக்கை 62 நிமிடங்களில் கடந்தாா்.

கடந்த மாா்ச் மாதம் தென் கொரியாவில் நடைபெறுவதாக இருந்து கரோனா சூழல் காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கு நடைபெறும் மகளிா் சூப்பா் லீக், மகளிா் சாம்பியன்ஷிப் ஆகிய கால்பந்து போட்டிகளைச் சோ்ந்த அணிகளின் வீராங்கனைகள், பணியாளா்கள் என 32 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மெதுபந்து (சாஃப்ட்பால்) விளையாட்டு சம்மேளனத்தின் தலைவராக முதல் முறையாக நீத்தல் நரங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அஜிங்க்ய ரஹானே பௌலா்களுக்கு உகந்த கேப்டன் என்று இந்திய வேகப்பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மா கூறினாா்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளுக்கான இயக்குநராக ஹிரோஷி சசாகி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com