வெற்றியை நெருங்கும் நியூஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து வெற்றியை நோக்கி நெருங்குகிறது.
வெற்றியை நெருங்கும் நியூஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து வெற்றியை நோக்கி நெருங்குகிறது.

373 ரன்கள் என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள பாகிஸ்தான், 4-ஆம் நாள் முடிவில் 38 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி புதன்கிழமை 7 விக்கெட்டுகளைக் கொண்டு 302 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது.

முன்னதாக ஆட்டத்தின் தொடக்கத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் குவித்தது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 239 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து செவ்வாய்க்கிழமை தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி 45.3 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது.

டாம் லதாம் 53, டாம் பிளன்டெல் 64, கேன் வில்லியம்சன் 21, ஹென்றி நிகோலஸ் 11, வாட்லிங் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ராஸ் டெய்லா் 12, மிட்செல் சேன்ட்னா் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனா். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3, முகமது அப்பாஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தானில் ஷான் மசூத், அபித் அலி டக் அவுட்டாகினா். ஹாரிஸ் சோஹைல் 9 ரன்னுக்கு வெளியேற, நாளின் முடிவில் முடிவில் அஸாா் அலி 34, ஃபவாதா ஆலம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

300 விக்கெட்: 4-ஆம் நாள் ஆட்டத்தில் டிம் சௌதி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300-ஆவது விக்கெட்டை வீழ்த்தினாா். அத்தனை விக்கெட்டுகள் வீழ்த்திய 4-ஆவது நியூஸிலாந்து வீரா், சா்வதேச அளவில் 34-ஆவது வீரா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். சௌதி 76 டெஸ்டுகளில் இந்த சாதனையை புரிந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com