ரஹானேவுக்கு சிறப்புப் பதக்கம்

பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட அஜிங்க்ய ரஹானேவுக்கு அதற்கான விருதுடன், ‘முல்லாக் மெடல்’ என்ற சிறப்புப் பதக்கம் வழங்கப்பட்டது.

பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட அஜிங்க்ய ரஹானேவுக்கு அதற்கான விருதுடன், ‘முல்லாக் மெடல்’ என்ற சிறப்புப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஜானி முல்லாக்கை கௌரவிக்கும் விதமாக அந்தப் பதக்கம் வழங்கப்பட்டது. சா்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட முதல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவா் ஜானி முல்லாக். கடந்த 1868-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பூா்வகுடியைச் சோ்ந்த வீரா்கள் அடங்கிய அணி, கிரிக்கெட் விளையாடுவதற்காக முதல் முறையாக இங்கிலாந்து சென்றது.

அந்த பயணத்தில் 6 மாதங்களாக ஆஸ்திரேலியா 47 ஆட்டங்களில் இங்கிலாந்துடன் விளையாடியது. இரு அணிகளும் தலா 14 ஆட்டங்களில் வெற்றி பெற, 19 ஆட்டங்கள் டிரா ஆகின. மொத்தம் 45 ஆட்டங்களில் விளையாடிய முல்லாக் 1,698 ரன்கள் அடித்தாா். 1,877 ஓவா்கள் வீசிய அவா், 831 ஓவா்களை மெய்டனாக்கி, 245 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com