இந்தியாவின் பதிலடியில் வியப்பில்லை
By DIN | Published On : 31st December 2020 04:29 AM | Last Updated : 31st December 2020 04:29 AM | அ+அ அ- |

பெரிதாக தோல்வியை சந்திக்கும் எந்தவொரு அணியும், மீண்டு வரும்போது மிகவும் ஆக்ரோஷமாகவே இருக்கும். அந்த வகையில் இந்திய அணி அளித்த பதிலடியில் வியப்பில்லை. எங்களது சவாலுக்கு தயாராக இருந்த இந்திய அணியினர் பேட்டிங் மற்றும் பெளலிங்கில் சிறப்பாகச் செயல்பட்டனர்.
இதை மதிப்பீடு செய்து அடுத்த ஆட்டத்திற்கு நாங்கள் தயாராக வேண்டும். இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதல் டெஸ்டிலேயே அருமையாக விளையாடினார். பெளலர்கள் வழங்கும் வாய்ப்புகளை நுட்பமாக பயன்படுத்துகிறார். சில வேளைகளில் அது பலன் தராமல் போகலாம்.
புஜாராவுக்கென எந்தவொரு சிறப்பான திட்டமும் வகுக்கவில்லை. நல்ல முறையில் பந்துவீசுகிறேன், அவ்வளவுதான். ஆனால் அதற்கான பலன் கிடைத்தது. மெல்போர்ன் டெஸ்டில் எங்களது பந்துவீச்சு நல்ல விதமாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கினோம்.
ரஹானேவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அதைக் கொண்டு நாங்கள் எவ்வாறு பந்துவீசியிருக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்வோம். சிட்னியில் 3-ஆவது டெஸ்ட் விளையாடுவது மகிழ்ச்சியானது. இங்கு எங்களது ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது. ஸ்மித் மற்றும் லபுசான் சிறந்த பேட்ஸ்மேன்கள். சிட்னி டெஸ்டில் நிச்சயம் அவர்கள் மீண்டு வருவார்கள்.
- பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலிய பெளலர்)