முழு உடற்தகுதி இல்லையென்றாலும் 3-வது டெஸ்டில் டேவிட் வார்னர் விளையாட வாய்ப்பு: ஆஸி. பயிற்சியாளர்
By DIN | Published On : 31st December 2020 02:22 PM | Last Updated : 31st December 2020 02:22 PM | அ+அ அ- |

முழு உடற்தகுதி இல்லையென்றாலும் 3-வது டெஸ்டில் டேவிட் வார்னர் விளையாட வாய்ப்புள்ளதாக ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்ட் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபார்மில் இல்லாத ஜோ பர்ன்ஸ் வெளியேற்றப்பட்டு, காயத்திலிருந்து மீண்டுள்ள டேவிட் வார்னர், வில் புக்கோவ்ஸ்கி, அபாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்ட் கூறியதாவது:
100 சதவீத உடற்தகுதியை வார்னர் அடையாமல் போகலாம். காயத்திலிருந்து அவர் மீண்டு வந்துள்ளார். 90 - 95% சதவீத உடற்தகுதி இருந்தாலும் அவரால் விளையாடி பங்களிக்க முடியுமா எனப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் தொடங்கும் முன்பு இதுபற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும். ஜனவரி 2, 3-ம் தேதிகளில் அவர் மீண்டும் பயிற்சிக்கு வரும்போது இதுபற்றி கலந்தாலோசிக்கப்படும் என்றார்.
உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர், டேவிட் வார்னர். மற்ற வீரர்களை விடவும் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்டவர். பந்துவீச்சாளர்களுக்கு அவரால் அழுத்தம் தர முடியும் என்றார்.