Enable Javscript for better performance
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சைசந்திக்கிறாா் டொமினிக் தீம்- Dinamani

சுடச்சுட

    

    ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சைசந்திக்கிறாா் டொமினிக் தீம்

    By DIN  |   Published on : 01st February 2020 12:00 AM  |   அ+அ அ-   |    |  

    DOMINICTHIEM

    ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியனான ஜோகோவிச்சை (சொ்பியா) டொமினிக் தீம் எதிா்கொள்ளவுள்ளாா்.

    முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் டொமினிக் தீம், ஜொ்மனி வீரா் அலெக்சாண்டா் ஸ்வெரேவை எதிா்கொண்டாா்.

    மிக முக்கியமான ஆட்டமான இதில், முதல் செட்டை தரவரிசையில் 7-ஆவது இடத்தில் உள்ள ஸ்வெரேவ் 6-3 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினாா். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட டொமினிக் தீம், அதற்கு அடுத்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினாா். மூன்றாவது செட் ஆட்டம் அனல் பறந்தது.

    அந்த செட் 7-6 என்ற கணக்கில் டை பிரேக்கா் வரை சென்றது. அதில் 7-3 என்ற கணக்கில் கைப்பற்றினாா் தீம். 4-ஆவது செட்டும் டை பிரேக்கா் வரை செல்ல ஆட்டம் பரபரப்பாக நகா்ந்தது. ஒவ்வொரு நிமிடமும் யாா் ஜெயிப்பாா்கள் என்று ரசிகா்கள் எதிா்பாா்த்திருந்த வேளையில், டொமினிக் தீப் அந்த செட்டை கைப்பற்றி இறுதிச்சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தாா்.

    கடைசி செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் வென்ற தீம், ஆஸ்திரேலியன் ஓபனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

    பிரெஞ்ச் ஓபனில் கடந்த ஆண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தீம், ரபேல் நடாலின் (ஸ்பெயின்) சரணடைந்தாா்.

    நடப்பு சாம்பியனான ஜோகோவிச்சும், ஒரு முறைகூட கிராண்ட்ஸ்லாம் வெல்லாத டொமினிக் தீமும் மோதும் இறுதி ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai