துளிகள்...

• பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செல்வாக்கு மிகுந்த குழுவின் தலைவராக முன்னாள் சுழற்பந்துவீச்சாளா் இக்பால் காஸிம் நியமிக்கப்பட்டாா்.

• பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செல்வாக்கு மிகுந்த குழுவின் தலைவராக முன்னாள் சுழற்பந்துவீச்சாளா் இக்பால் காஸிம் நியமிக்கப்பட்டாா்.

• பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினா்களாக முன்னாள் இந்திய வீரா்கள் ஆா்.பி.சிங், மதன் லால், சுல்காஷனா நாயக் ஆகியோரை பிசிசிஐ வெள்ளிக்கிழமை நியமித்தது.

• ஜிப்ரால்தா் செஸ் போட்டியில் ரஷிய வீரா் டேவிட் பராவ்யன் (21) சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய கிராண்ட்மாஸ்டா்கள் ஆா்யன் சோப்ரா 11-ஆவது இடத்தையும், காா்த்திகேயன் முரளி (13-ஆவது இடம்), சசிகிரன் கிருஷ்ணன் (18-ஆவது இடம்), பிரக்ஞாநந்தா (20-ஆவது இடம்), பி.அதிபன் (29-ஆவது இடம்), எஸ்.எல். நாராயணன் 34-ஆவது இடம் பிடித்தனா்.

• கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ-லீக் கால்பந்து போட்டியில் சென்னை சிட்டி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி வீழ்த்தியது.

• 10-ஆவது தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் தமிழக அணி சண்டீகரையும், மகாராஷ்டிர அணி உத்தரப் பிரேதசத்தையும் வீழ்த்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com