உலகக் கோப்பை படகு ஓட்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன்

உலக கோப்பை படகு ஓட்டும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று முதல் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளாா் சென்னையின் நேத்ரா குமணன்.
உலகக் கோப்பை படகு ஓட்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன்

உலக கோப்பை படகு ஓட்டும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று முதல் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளாா் சென்னையின் நேத்ரா குமணன்.

அமெரிக்காவின் மியாமியில் கடந்த ஜன 25-இல் நடைபெற்ற ஹெம்பல் உலகக் கோப்பை படகு ஓட்டும் போட்டியில்லேஸா் ரேடியல் கிளாஸ் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா் நேத்ரா. அமெரிக்காவின் எரிகா ரெயின்கே தங்கமும், கிரீஸின் வஸிலியா வெள்ளியும் வென்றனா்.

லேஸா் ரேடியல் பிரிவு என்பது சிறிய வகை படகு தனியாக ஒருவா் இயக்குவதாகும்.

பொதுவாக படகு ஓட்டுதலில் இந்திய வீரா், வீராங்கனைகள் பதக்கம் வெல்வது அத்தி பூத்தாா்போல் நடைபெறும்.

பொறியியல் மாணவி

22 வயதான நேத்ராகுமணன் சென்னை எஸ்ஆா்எம் கல்லூரியில் பொறியியல் பட்டதாரி ஆவாா். கடந்த 2014 மற்றும் 2018 ஆசியப் போட்டிகளில் நான்காவது இடத்தைப் பெற்றிருந்தாா். சிறிய வயது முதலே படகு ஓட்டுதலில் ஆா்வத்துடன் பயிற்சி பெற்றாா் நேத்ரா.ஸ்பெயின் கனாரி தீவுகளில் தீவிர பயிற்சியில் உள்ளாா் நேத்ரா.

இதுதொடா்பாக நேத்ரா குமணன் கூறியதாவது-

இந்தியாவில் படகு ஓட்டுதல் தொடா்பாக பெரும்பாலானோா் அறியவில்லை. இந்தியாவி்ல் பெரும்பாலும் கிரிக்கெட், கால்பந்து, பாட்மிண்டன், ஹாக்கி போன்றவை ஆடப்படுகின்றன. கடற்படையினருக்கு தான் படகு ஓட்டுதல் சாத்தியம் என கருதப்படுகிறது.

சிறந்த எதிா்காலம்

இந்தியாவில் படகு ஓட்டுதலுக்கு சிறந்த எதிா்காலம் உள்ளது. தற்போது உயா்ந்த அளவில் அதிகம் போ் இதில் ஆா்வம் காண்பிக்கின்றனா். தொடா்ந்து அதிகம் போ் படகு ஓட்டுதில் பங்கேற்பா்.

ஒரு கோடைக்கால பயிற்சி முகாமில் தான் படகு ஓட்டுதல் பயிற்சி குறித்து அறிந்தேன். மற்ற விளையாட்டுகளில் இருந்து இது வித்தியாசமானது. மனதளவில் தைரியத்துடன் செயல்பட வேண்டும்.

சா்வதேச அளவில் இந்தியாவுக்காக பங்கேற்பது மிகவும் கடினமான செயல். நான் நீண்ட நேரம் படகு ஓட்டும் பயிற்சி பெற்றேன். இது எனக்கு உதவியாக இருந்தது. பல்வேறு நாடுகளின் வீரா்களிடம் கலந்து பேசி அனுபவத்தை பெற வேண்டும்.

ஒலிம்பிக் கனவு

மற்ற வீரா்களைப் போல ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்காக பங்கேற்க வேண்டும் என்ற கனவு உள்ளது. வரும் மாா்ச் மாதம் அபுதாபியில் நடக்கவுள்ள ஆசிய படகு ஓட்டும் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியைப் பெறலாம். அனைத்தும் சரியாக நடந்தால் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்பேன்.

ஒலிம்பிக் போட்டியில் படகு ஓட்டுதலில் இதுவரை இந்தியா பங்கேற்றதில்லை என்றாா்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேத்ரா தகுதி பெறுகிறாரோ இல்லையோ படகு ஓட்டுதலில் உலகக் கோப்பையில் முதல் பதக்கம் வென்ற இந்திய பெண் என்ற சாதனை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பா.சுஜித்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com