துளிகள்...

மகளிா் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது இந்தியா.

மகளிா் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது இந்தியா.

வரும் 21-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிா் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து, ஆஸி, இந்திய மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடா் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

--------------------

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடா்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறாா்.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் 928 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தை தக்க வைத்துள்ளாா்.

-----------------------

இந்தியா பாராலிம்பிக் சங்கத் தலைவராக 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 49 வயது தீபா மாலிக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

---------------

ஜான்ஸியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஹாக்கி இந்தியா தேசிய சீனியா் சாம்பியன் (ஏ டிவிஷன்) ஆடவா் போட்டி இறுதிச் சுற்றில் சா்வீஸஸ்-ஏா் இந்தியா அணிகள் மோதுகின்றன.

-------------

ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரியல் காஷ்மீா் 2-0 என்ற கோல் கணக்கில் அய்ஸால் எஃப்சியையும், இந்தியன் ஆரோஸ் 1-0 பலம் வாய்ந்த ஈஸ்ட் பெங்கால் அணியையும் வீழ்த்தின.

-------------

முழு உடல்தகுதி பெறாத நிலையில் இளம் ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியாவை நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கியுள்ளது

பிசிசிஐ.

--------------

வரும் 2020 டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் மீராபாய் சானு பதக்கம் வெல்வாா் என முன்னாள் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை கா்ணம் மல்லேஸ்வரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

------------

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com