இந்தியாவைப் பிரிப்பதற்கான சதிதான் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள்: பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடைபெறும் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னணியில் அரசியல் திட்டம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பிரிப்பதற்கான சதிதான் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள்: பிரதமர் மோடி


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடைபெறும் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னணியில் அரசியல் திட்டம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) முதன்முதலாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

"சீலம்பூர் ஆகட்டும், ஜாமியா ஆகட்டும் அல்லது ஷகீன் பாக் ஆகட்டும்.. கடந்த பல நாட்களாக சிஏஏ தொடர்பாக நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் தற்செயலாக நடக்கும் போராட்டங்களா? இது ஒரு சோதனை முயற்சி. ஜாமியா மற்றும் ஷகீன் பாக் உட்பட இந்த அனைத்துப் போராட்டங்களுக்குப் பின்னணியிலும் ஒரு அரசியல் திட்டம் உள்ளது. இந்தப் போராட்டங்கள் இந்தியாவைப் பிரிப்பதற்கானச் சதி. இந்தப் போராட்டங்கள் தேசத்தின் நல்லிணக்கத்தை அழிக்கப்போகின்றன.

ஆனால் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் மக்களைத் தூண்டுகின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தையும், மூவர்ணக் கொடியையும் முன்னிலைப்படுத்துவதன் மூலம், உண்மையான சதித் திட்டத்தில் இருந்து கவனம் திசை திருப்பப்படுகிறது. துல்லியத் தாக்குதல் சமயத்தில் இவர்கள் நமது படைகளின் திறன்களைச் சந்தேகித்தனர். தில்லி குடிமக்களுக்கு இப்படிப்பட்டவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டுமா? இந்தியாவைத் துண்டாக்க நினைப்பவர்களை இவர்கள் பாதுகாக்கின்றனர்" என்றார்.

சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக ஜாமியா மற்றும் ஷகீன் பாக்கில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிஏஏ-வை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்தச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு எதிரானது அல்ல என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க அண்மையில் தில்லி தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், துரோகிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். இதையடுத்து, தில்லியில் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடங்களில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com