இந்திய அணியின் கேப்டனாகப் பணியாற்றிய அனுபவம்: கே.எல். ராகுல் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் இன்னிங்ஸில் 17-வது ஓவரின் போது, கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்
இந்திய அணியின் கேப்டனாகப் பணியாற்றிய அனுபவம்: கே.எல். ராகுல் நெகிழ்ச்சி!

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 5-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. இதன் மூலம் 5-0 என முழுமையாக டி20 தொடரை வென்ற முதல் அணி என்ற சிறப்பைப் பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய நியூஸி அணி 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது.

கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்பட்டார். ஆனால் இந்திய அணியின் இன்னிங்ஸில் 17-வது ஓவரின் போது, கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார் ரோஹித் சர்மா. இதையடுத்து அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது:

எனக்கு அளிக்கப்படும் சவால்களை விரும்ப ஆரம்பித்துள்ளேன். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அணியில் இல்லாத நிலையில் நாங்கள் செயலாற்றிய விதம் அபாரமானது. இருவரும் மைதானத்தில் இல்லாததால் நிறைய கேள்விகள் எழுந்தன. நான் கேப்டனாக இருந்தாலும் எல்லோரும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டார்கள்.

பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிப்பார் என்று பயப்படாமல் புதிய உத்திகளை நிகழ்த்தினார்கள் பந்துவீச்சாளர்கள். இதுபோன்ற மனநிலை டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியம். விராட் கோலி இல்லாமல் ஸ்டம்புக்குப் பின்னால் இருந்துகொண்டு என்னால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு பந்துக்கும் ஓடிச்சென்று அறிவுரை சொல்ல முடியாது. பந்துவீச்சாளர்கள் அவர்களுடைய சொந்தத் திட்டங்களுடன் வந்திருந்தார்கள். என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததைக் காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com