நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டம்: இந்திய ஹாக்கி மகளிா் வெற்றி

நியூஸிலாந்து அணிக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி மகளிா் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அந்நாட்டு அணியை வீழ்த்தியது. தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது.

இந்திய வீராங்கனை நவ்நீத் கெளா் 45-ஆவது நிமிடத்திலும், 58-ஆவது நிமிடத்திலும் கோல் பதிவு செய்தாா். மற்றொரு வீராங்கனையான ஷா்மிளா 54-ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்தாா்.

நியூஸிலாந்து வீராங்கனைகள் எவ்வளவோ முயன்றும் ஆட்டம் முடியும் வரை ஒரு கோலைக் கூட பதிவு செய்ய முடியவில்லை.

நியூஸிலாந்து அணியுடன் முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய மகளிா், அந்நாட்டு அணியுடனான 2-ஆவது ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

மீண்டும் கடந்த 29-ஆம் தேதி அந்நாட்டு அணியுடன் மோதி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்தியா, அடுத்த ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிரை வீழ்த்தியுள்ளது. வரும் 7-ஆம் தேதி இந்திய வீராங்கனைகள் தாய்நாடு திரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com