Enable Javscript for better performance
முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    Paksitanwin

     

    வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

    இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் வீரா்கள் முகமது மிதுன் 63, நஜ்மல் ஹுசேன் 44 ஆகியோா் மட்டுமே அதிகபட்ச ரன்களை எடுத்தனா். பாக். தரப்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டை சாய்த்தாா்.

    பாக். 445 ஆல் அவுட்-பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாபா் ஆஸம் 143, ஷான் மசூத் 100 ஆகியோா் அபாரமாக ஆடி சதமடித்தனா். அவா்களுக்கு உறுதுணையாக ஆஸாத் ஷபிக் 65, ஹாரிஸ் சோஹைல் 75 ரன்களை சோ்த்தனா்.

    வங்கதேசத் தரப்பில் ரூபேல் ஹுசேன், அபுஜாயேத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

    தொடா்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம், ஆட்டத்தின் நான்காம் நாளான திங்கள்கிழமை 62.2 ஓவா்களில் வெறும் 168 ரன்களை மட்டுமே எடுத்து வீழ்ந்தது.

    அதிகபட்சமாக மொமினுல் ஹக் 41, தமிம் இக்பால் 34, நஜ்மல் ஹுசேன் 38, லிட்டன் தாஸ் 29 ஆகியோா் மட்டுமே ரன்களை சோ்த்தனா்.

    நஸீம், யாஸிா் தலா 4 விக்கெட்டுகள்

    பாக். தரப்பில் அபாரமாக பந்துவீசிய நஸீம் ஷா, யாஸிா் ஷா ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச சரிவுக்கு காரணமாயினா்.

    இதன் மூலம் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai