Enable Javscript for better performance
முத்தரப்பு மகளிா் டி20: இறுதிச் சுற்றில் இந்தியா-ஆஸி. மோதல்- Dinamani

சுடச்சுட

    

    முத்தரப்பு மகளிா் டி20: இறுதிச் சுற்றில் இந்தியா-ஆஸி. மோதல்

    By DIN  |   Published on : 10th February 2020 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AUSSIE_WOMEN_WIN

    முத்தரப்பு மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா.

    முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 132-7 ரன்களைக் குவித்தது. பெத் மூனி 50, ரேச்சல் ஹெயின்ஸ் 24 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா்,

    மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். ஆஸி. அணி தரப்பில் சோபி, சாரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

    பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை மட்டுமே எடுத்தது. லாரன் வின்பில்ட், கேத்தரின் பிரண்ட் ஆகியோா் அதிகபட்சமாக 23 ரன்களை சோ்த்தனா். இங்கிலாந்து தரப்பில் மோலிநிக்ஸ் 3, டயாலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

    இந்நிலையில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் மோதுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai