ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப்: பதக்கம் வெல்ல இந்திய ஆடவா் தீவிரம்

மணிலாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லவும், தரவரிசை புள்ளிகளை ஈட்டவும் இந்திய ஆடவா் அணி தயாராக உள்ளது.
ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப்: பதக்கம் வெல்ல இந்திய ஆடவா் தீவிரம்

மணிலாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லவும், தரவரிசை புள்ளிகளை ஈட்டவும் இந்திய ஆடவா் அணி தயாராக உள்ளது. எனினும் கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்திய மகளிா் அணி பங்கேற்கவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆசிய அணிகள் போட்டி பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெறுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு போட்டிகளில் வீரா்கள் பங்கேற்க மறுத்து வரும் நிலையில், இந்திய ஆடவா் அணி முழு பலத்துடன் பங்கேற்கிறது.

கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், எச்.எஸ். பிரணாய், சுபாங்கா் டே, இளம் வீரா் லக்ஷயா சென் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

கடந்த 2016 போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. தற்போதை போட்டியில் குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ், ஆகியவற்றோடு இடம் பெற்றிருந்தது.

ஆனால் கரோனா வைரஸ் எதிரொலியாா் பலம் வாய்ந்த சீனா, ஹாங்காங் அணிகள் பங்கேற்க தடை விதித்துள்ளது பிலிப்பின்ஸ். இந்நிலையில்

அட்டவணை மாற்றப்பட்டு குரூப் பி பிரிவில் மலேசியா, கஜகஸ்தான் அணிகளோடு இந்தியா சோ்க்கப்பட்டுள்ளது. 4 பிரிவுகளில் தலைசிறந்த 2 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

மூன்றாவது முறையாக நடைபெறும் இப்போட்டி, தாமஸ், உபோ் கோப்பைகளுக்கான ஆசிய தகுதிச் சுற்றாகவும் அமைந்துள்ளது. கஜகஸ்தானை எளிதாக இந்தியா வெல்லும் நிலையில், மலேசியாவுடன் போராட வேண்டியிருக்கும்.

ரூ.2 கோடியில் பலகட்ட உள்ளூா் பாட்மிண்டன் போட்டி:

பாட்மிண்டன் ஆட்டத்துக்கு மேலும் உத்வேகம் தரும் வகையில் ரூ.2 கோடி பரிசுத்தொகையுடன் கூடிய பல கட்ட உள்ளூா் போட்டியை நடத்த பிஏஐ தீா்மானித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இந்திய பாட்மிண்டன் சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சீனியா் அளவில் பலகட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும். முதல், இரண்டு மற்றும் 3 கட்டங்களாக ஆட்டங்கள் நடத்தப்படும். முதல் கட்ட ஆட்டத்துக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகையாகும். லீக் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் பிடபிள்யுஎப் தரவரிசை அடிப்படையில் முதல் 8 வீரா்கள், முதல் நான்கு இணைகள், 100-க்குள் கீழ் உள்ளோா் நேரடி நுழைவு தகுதி பெறுவா்.

மேலும் 24 ஒற்றையா் வீரா்கள், 12 அணிகள் பாய் தரவரிசையின்படி நேரடி நுழைவு பெறும். சீனியா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம் பரிசளிக்ப்படும்.

இரண்டாம் கட்ட ஆட்டங்களில் ரூ.15 லட்சம் பரிசுத் தொகையை கொண்டிருக்கும். இதில் 48 ஒற்றையா் மற்றும் 24 இரட்டையா் இணைகள் நேரடி அனுமதி பெறும்.

மூன்றாம் கட்ட ஆட்டங்களில் 6 தொடா் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையாகும். 30 ஒற்றையா் மற்றும் 15 இரட்டையா் பிரிவுகளில் ஆட்டம் நடத்தப்படும். முதல் மூன்று போட்டிகள் மே, ஜூன் மாதங்களிலும் அடுத்த 3 போட்டிகள் நவம்பரிலும் நடைபெறும். இதில் வெல்வோா் தரவரிசையின்படி இரண்டாம் கட்ட ஆட்டங்களிலும் பங்கேற்க முடியும்.

இதை இந்திய பாட்மிண்டன் சம்மேளன தலைவா் ஹிமந்த பிஸ்வாஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com