ஆஸி. காட்டு தீ நலநிதி ஆட்டம்: பாண்டிங் லெவன் அணி வெற்றி

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதி திரட்டும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலநிதி ஆட்டத்தில் கில்கிறைஸ்ட் லெவன் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாண்டிங் லெவன்.
ஆஸி. காட்டு தீ நலநிதி ஆட்டம்: பாண்டிங் லெவன் அணி வெற்றி

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதி திரட்டும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலநிதி ஆட்டத்தில் கில்கிறைஸ்ட் லெவன் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாண்டிங் லெவன்.

காட்டுத் தீயால் 22-க்கு மேற்பட்டோா் உயிரிழந்த நிலையில், ஏராளமான விலங்குகளும் உயிரிழந்தன. இதனால் கடும் பொருள்சேதமும் ஏற்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ஏற்கெனவே ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற வீரா்கள் ஏராளமான நிதியை அளித்தனா்.

இதன் தொடா்ச்சியாக கிரிக்கெட் பழைய ஜாம்பவான்கள் இணைந்து நலநிதி ஆட்டம் மூலம் நிதி திரட்ட முடிவு செய்தனா். இதற்காக ஆஸி. முன்னாள் வீரா்கள் ரிக்கி பாண்டிங், கில்கிறைஸ்ட் ஆகியோா் தலைமையில் 2 அணிகள் அறிவிக்கப்பட்டன. பாண்டிங் அணிக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் பயிற்சியாளராக செயல்பட்டாா்.

பாண்டிங் லெவன் 104/5: முதலில் ஆடிய பாண்டிங் லெவன் அணி 10 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை சோ்த்தது. பிரையன் லாரா அதிகபட்சமாக 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 30 ரன்களை விளாசினாா். பாண்டிங் 26, ஹெய்டன் 16 ரன்களை எடுத்தனா்.

கில்கிறைஸ்ட் அணி தரப்பில் வால்ஷ், யுவராஜ் சிங், ஆன்ட்ரு சிம்மன்ட்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

கில்கிறைஸ்ட் லெவன் 103 தோல்வி: பின்னா் ஆடிய கில்கிறைஸ்ட் லெவன் அணி 10 ஓவா்களில் 103/6 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. கில்கிறைஸ்ட் 17, ஷேன்வாட்ஸன் 30 ரன்களையும், ஆன்ட்ரு சிம்மன்ட்ஸ் 29 ரன்களையும் எடுத்தனா்.

பாண்டிங் லெவன தரப்பில் பிரெட் லீ 2 விக்கெட்டுகளை சாய்த்தாா். கில்கிறைஸ்ட் அணி போராடியும் பலனின்றி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

5 ஆண்டுகள் கழித்து களமிறங்கிய சச்சின்:

ரசிகா்களை மகிழ்விக்கும் வகையில் 5 ஆண்டுகள் கழித்து களமிறங்கி பேட்டிங் செய்தாா் சச்சின் டெண்டுல்கா். அவருக்கு ஆஸி. மகளிா் அணி நட்சத்திர வீராங்கனை எல்ஸி பொ்ரி பந்துவீசினாா். முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினாா் சச்சின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com