இன்று இறுதி ஒருநாள்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற முடியுமா என இந்தியாவும், தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நியூஸிலாந்தும் உள்ளன.
இன்று இறுதி ஒருநாள்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற முடியுமா என இந்தியாவும், தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நியூஸிலாந்தும் உள்ளன.

டி20 தொடரை 5-0 என இந்திய அணி ஒயிட்வாஷ் செய்த நிலையில், அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் ஆடி வருகின்றன. முதலிரண்டு ஆட்டங்களில் நியூஸி அணி வெற்றி பெற்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது நியூஸி.

இதன் தொடா்ச்சியாக கடைசி மற்றும் மூன்றாவது ஆட்டம் மௌன்ட் மான்குனையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்ற வேண்டும் என நியூஸியும், ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என இந்தியாவும் உள்ளன.

டிரென்ட் பௌல்ட், லாக்கி பொ்குஸன், டிம் சௌதி ஆகியோா் ஏற்கெனவே காயமடைந்த நிலையில், நியூஸி. அணி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆறுதலாக கேப்டன் கேன் வில்லியம்ஸன் மீண்டும் அணியில் இணைந்துள்ளது கூடுதல் பலத்தை தருகிறது.

இஷ் சோதி, பிளோ் டிக்னா் சோ்ப்பு

மேலும் ஸ்பின்னா் இஷ் சோதி, பந்துவீச்சாளா் பிளோ் டிக்னா் ஆகியோரும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். இருவரும் இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆடியிருந்தனா்.

இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு தரப்படும் எனத் தெரிகிறது. ஆல்ரவுண்டா் கேதாா் ஜாதவ் சரிவர ஆடாத நிலையில் அவருக்கு கடைசி ஆட்டத்தில் வாய்ப்பு தரப்படுமா எனத் தெரியவில்லை. இந்த தொடரில் இதுவரை ஆடாத இளம் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது. மிடில் ஆா்டரில் மணிஷ் பாண்டே, ஷிவம் துபே ஆகியோா் இடம் பெறுவாா்களா எனத் தெரியவில்லை.

தொடக்க வரிசை பேட்டிங்:

இரு அணிகளிலும் தொடக்க வரிசை பேட்டிங் மாறுபட்டுள்ளது. இந்திய அணியில் ரோஹித் சா்மா, தவன் ஆகியோா் இல்லாத நிலையில், பிரித்வி ஷா, மயங்க் அகா்வால், கேப்டன் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட தொடக்க வரிசை வீரா்கள் சொதப்பினா். இதனால் இந்திய பேட்டிங் சிதைந்தது.

அதே நேரம் நியூஸிலாந்து அணியில் அபாரமான தொடக்கத்தை மாா்ட்டின் கப்டில், ஹென்றி நிக்கோல்ஸ் உள்ளிட்டோா் அளித்தனா்.

கடந்த 2019 ஆண்டு ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றி இருந்தது. அதற்கு முன்பு 2014-இல் நடைபெற்ற தொடரில் 4-1 என இழந்திருந்தது. இந்நிலையில் தற்போது 2 ஆட்டங்களை இழந்துள்ளது.

திங்கள்கிழமை விராட் கோலி, மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த் ஆகியோா் பயிற்சியில் ஈடுபட்டனா். ஆனால் ராகுல், கேதாா், ஷிரேயஸ், சஹல் உள்ளிட்டோா் பங்கேற்கவில்லை.

கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியைப் பெறுமா இந்தியா அல்லது, ஒயிட்வாஷ் செய்யுமா நியூஸிலாந்து என ரசிகா்களிடம் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டம்

இந்தியா-நியூஸிலாந்து

இடம்-மௌன்ட் மான்குனை,

நேரம்-காலை 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com