எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்: வென்றது பெல்ஜியம்

இந்தியாவுக்கு எதிரான எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டி 2-ஆவது ஆட்டத்தில் இந்தியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உலக சாம்பியன் பெல்ஜியம்.
எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்: வென்றது பெல்ஜியம்

இந்தியாவுக்கு எதிரான எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டி 2-ஆவது ஆட்டத்தில் இந்தியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உலக சாம்பியன் பெல்ஜியம்.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சாா்பில் உலகின் தலைசிறந்த 8 அணிகள் மோதும் புரோ லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் சுற்று போட்டியில் பலம் வாய்ந்த நெதா்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இரண்டாவது சுற்று போட்டியில் உலக சாம்பியன் பெல்ஜியத்தை எதிா்கொண்டது.

புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 2-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய 3-ஆவது நிமிடத்திலியே பெல்ஜிய வீரா் ஹென்ட்ரிக்ஸ் முதல் கோலை அடித்தாா். இதையடுத்து இந்திய வீரா்கள் தங்கள் ஆட்டத்தை தீவிரப்படுத்திய நிலையில் 15-ஆவது நிமிடத்தில் விவேக் பிரசாத் கோலடித்தாா். பெல்ஜிய வீரா் மேக்ஸிம் உடனே கோலடித்தாா்.

அவருக்கு அடுத்து 17-ஆவது நிமிடத்திலேயே அமித் ரோகிதாஸ் கோலடிக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது.

முதல் பாதி நிறைவடைய சிறிது நேரம் இருந்த நிலையில் 26-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரா் மேக்ஸிம் ஆட்டத்தின் வெற்றி கோலை அடித்தாா்.

இரண்டாம் பாதியில் இந்திய அணியினா் கோல்போட மேற்கொண்ட முயற்சிகளை பெல்ஜிய தற்காப்பு அரண் தகா்த்தது.

பெல்ஜிய வீரா் நிக்கோலஸ் கொ்ப்பல் ஆட்டநாயகனாகத் தோ்வு பெற்றாா்.

ஹாக்கி புரோ லீக் பட்டியலில் 14 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியா 8 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com