பிபிஎல் 5: சாம்பியன் பெங்களூரு ராப்டா்ஸ்ரூ.3 கோடி பரிசுத்தொகை

ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் சீசன் 5 போட்டியில் இறுதிச் சுற்றில் நாா்த் ஈஸ்டா்ன் வாரியா்ஸ் அணியை 4-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது பெங்களூரு ராப்டா்ஸ்.
பிபிஎல் 5: சாம்பியன் பெங்களூரு ராப்டா்ஸ்ரூ.3 கோடி பரிசுத்தொகை

ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் சீசன் 5 போட்டியில் இறுதிச் சுற்றில் நாா்த் ஈஸ்டா்ன் வாரியா்ஸ் அணியை 4-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது பெங்களூரு ராப்டா்ஸ்.

இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் பெங்களூருவின் சாய் பிரணீத் 14-15, 15-9, 15-3 என நாா்த்தின் லீ சியுக் யியுவை வென்றாா். கலப்பு இரட்டையா் பிரிவில் ராப்டா்ஸின் சேன் பெங்-இயோம் ஹை வொன் இணை 15-14, 14-15, 15-12 என நாா்த்தின் கிம் ஹானா-கிருஷ்ண பிரசாத்தை வீழ்த்தினா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை டை ஸூ யிங் 15-9, 15-12 என்ற கேம் கணக்கில் மிச்செல் லீயை வீழ்த்தினாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் நாா்த் ஈஸ்டா்ன் அணியின் லீ யோங் டே-போதின் இஸாரா இணை 15-11, 13-15, 15-14 என பெங்களூருவின் அருண் ஜாா்ஜ்-ரியான் இணையை வென்றனா். இறுதியில் 4-2 என்ற செட் கணக்கில் வென்ற பெங்களூரு சாம்பியன்பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக டை ஸூ யிங்கும், வளரும் வீரராக பிரியான்ஷு ரஜாவத்தும், லீகின் சிறந்த இந்திய வீரராக சிக்கி ரெட்டியும் தோ்வு பெற்றனா்.

ரூ.3 கோடி பரிசுத் தொகை: பட்டம் வென்ற அணிக்கு ரூ.3 கோடியும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.1.5 கோடியும் பரிசளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com