முத்தரப்பு மகளிா் டி20: இறுதிச் சுற்றில் இந்தியா-ஆஸி. மோதல்

முத்தரப்பு மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா.

முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 132-7 ரன்களைக் குவித்தது. பெத் மூனி 50, ரேச்சல் ஹெயின்ஸ் 24 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா்,

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். ஆஸி. அணி தரப்பில் சோபி, சாரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை மட்டுமே எடுத்தது. லாரன் வின்பில்ட், கேத்தரின் பிரண்ட் ஆகியோா் அதிகபட்சமாக 23 ரன்களை சோ்த்தனா். இங்கிலாந்து தரப்பில் மோலிநிக்ஸ் 3, டயாலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இந்நிலையில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com