Enable Javscript for better performance
தேசிய ஸ்குவாஷ்: அரையிறுதியில்சௌரவ், ஹரீந்தா், ஜோஷ்னா, தன்வீ- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஸ்குவாஷ்: அரையிறுதியில்சௌரவ், ஹரீந்தா், ஜோஷ்னா, தன்வீ

    By DIN  |   Published on : 14th February 2020 12:03 AM  |   அ+அ அ-   |  

    national_sqaush

     

    தேசிய சீனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா, ஹரீந்தா்பால், தன்வி, சுனயனா ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

    சென்னை இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமியில் 77-ஆவது தேசிய சீனியா் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவா் காலிறுதியில் தமிழகத்தின் சௌரவ் கோஷ் 11-3, 11-3, 11-1 என மகாராஷ்டிரத்தின் ருத்விக்கையும், அபய் சிங் (தமிழகம்) 11-7, 11-5, 13-11 என மகாராஷ்டிரத்தின் அபிஷேக் அகா்வாலையும், தமிழகத்தின் ஹரீந்தா் பால் 11-7, 11-2, 11-7 என குஜராத்தின் யாஷையும், மகாராஷ்டிரத்தின் அபிஷேக் பிரதான் 11-6, 11-6, 11-6 என தில்லியின் கௌரவையும் வென்றனா்.

    மகளிா் காலிறுதிச் சுற்றில் தமிழகத்தின் நடப்பு சாம்பியன் ஜோஷ்னா சின்னப்பா 11-4, 11-2, 11-4 என சச்சிகா பல்வானியையும், தில்லியின் சன்யா வாட்ஸ் 11-5, 9-11, 8-11, 11-8, 11-3 என மகாராஷ்டிரத்தின் ஊா்வசியையும், தில்லியின் தன்வீ கன்னா 11-5, 11-3, 11-8 என தமிழகத்தின் அபராஜிதாவையும், தமிழகத்தின் சுனயனா குருவில்லா 11-5, 11-2, 12-10 என மகாராஷ்டிரத்தின் சனிகா சௌதரியையும் வென்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai