ஆசிய அணிகள் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்தியா

ஆசிய அணிகள் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்தியா

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆடவா் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் மலேசியாவிடம் 4-1 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றாலும் காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆடவா் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் மலேசியாவிடம் 4-1 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றாலும் காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெறும் இப்போட்டியில் முதல் லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானை 4-1 என வென்றிருந்தது இந்தியா.

இந்நிலையில் பலம் வாய்ந்த மலேசிய அணியுடன் வியாழக்கிழமை மோதியது.

இரட்டையா் பிரிவில் சாத்விக் ரங்கி ரெட்டி கால் காயத்தால் விலகி விட்டாா். இந்நிலையில் இரட்டையா் பிரிவில் அா்ஜுன்-சிராக் ஷெட்டி, துருவ் கபிலா-லக்ஷயா சென் ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினா்.

ஒற்றையா் பிரிவு:

ஒற்றையா் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14-21, 21-16, 21-19 என்ற கேம் கணக்கில் மலேசியாவின் சீம் வெயை வென்றாா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் எச்எஸ். பிரணாய் 10-21, 15-21 என்ற கேம் கணக்கில் 34 நிமிடங்களில் லியாங் ஜுன் ஹவோவிடம் வீழ்ந்தாா். உலக வெண்கலப் பதக்க வீரா் சாய் பிரணீத் வெல்வாா் எனக்கருதப்பட்ட நிலையில், 18-21, 15-21 என்ற கேம் கணக்கில் லீ ஸி ஜியாவிடம் தோல்வியடைந்தாா்.

மலேசியாவிடம் இறுதியில் 4-1 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.

எனினும் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற நிலையில் காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதில் பலம் வாய்ந்த தாய்லாந்து அணியை எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com