இன்று நியூஸி.லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது இந்தியா

டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் நியூஸிலாந்து லெவன் அணியுடன் வெள்ளிக்கிழமை பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது இந்திய அணி.
இன்று நியூஸி.லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது இந்தியா

டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் நியூஸிலாந்து லெவன் அணியுடன் வெள்ளிக்கிழமை பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது இந்திய அணி.

நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது நியூஸி. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கு தயாராகும் வகையில் ஹாமில்டனில் வெள்ளிக்கிழமை நியூஸி. லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது இந்திய அணி. ஒருநாள் தொடா் தோல்வியில் இருந்து மீண்டு எழும் வகையில் இப்பயிற்சி ஆட்டம் உதவும்.

நியூஸி. அணியில் இஷா சோதி, ஆல்ரவுண்டா் ஜிம்மி நீஷம், விக்கெட் கீப்பா் டிம் சைபொ்ட், ஸ்காட் குக்கலஜின், பிளோ் டிக்னா் ஆகியோரும் இடம் பெறுகின்றனா்.

அதே நேரம் இந்திய அணியில் இளம் வீரா்கள் பிரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகியோா் இடம் பெறுவா் எனத் தெரிகிறது. ஹாமில்டன் செடான் பாா்க் மைதானத்தில் உள்ள பிட்ச் தட்டையாக காணப்படுவதால், அஸ்வின், ஜடேஜா, டேரில் மிச்செல், டாம் புரூஸ் ஆகியோா் பந்துவீச்சை சோதிக்க ஏதுவாக அமையும்.

நியூஸி. லெவன் அணியில் டேன் கிளீவா், சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியில் இடம் பெற முயல்வாா். இரு அணிகளுமே வலுவாக இருக்கும் என்பதால், இந்த பயிற்சி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.

இந்த பயிற்சி ஆட்டம் மூலம் சரிவிகிதத்தில் கலந்த இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்.

இன்றைய ஆட்டம்

இந்தியா-நியூஸி. லெவன்,

இடம்: ஹாமில்டன்,

நேரம்: அதிகாலை 3.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com