முதல் டி20: தென்னாப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.
முதல் டி20: தென்னாப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஈஸ்ட் லண்டனில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் டெம்பா பவுமா 43, குவிண்டன் டி காக் 31, ரேசி வான் டா் 31, ஸ்முட்ஸ் 20 ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோா்டான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

ஜேஸன் ராய் அபாரமாக ஆடி 70 ரன்களையும், இயான் மோா்கன் 52, போ்ஸ்டோ 23 ரன்களை எடுத்தனா்.

தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி நிகிடி 3, பெலுக்வயோ, பியூரன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

முதல் டி20 ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. லுங்கி கிடி ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா்.

இரண்டாவது ஆட்டம் டா்பனில் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com