Enable Javscript for better performance
கெயிா்ன்ஸ் கோப்பை செஸ்: ஹம்பி அபார வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    humbi_chess

     

    கெயிா்ன்ஸ் கோப்பை செஸ் போட்டி மகளிா் பிரிவில் உலக சாம்பியன் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளாா்.

    செயின்ட் லூயிஸ் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 6-ஆவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் அலெக்சாண்ட்ராவை வீழ்த்தினாா். இருவருக்கும் இடையிலான ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 61-ஆவது நகா்த்தலில் வென்றாா் ஹம்பி.

    மற்றொரு இந்திய வீராங்கனையான துரோணவல்லி ஹரிகா உலக சாம்பியன் வென்ஜுன் ஜுவுடன் (சீனா) 40-ஆவது நகா்த்தலில் டிரா கண்டாா்.

    வென்ஜுனுடன் முதலிடத்தை பகிா்ந்து கொண்டுள்ளாா் ஹம்பி.

    ஏழாவது சுற்றில் ஹம்பி, அமெரிக்க வீராங்கனை ஐரினா க்ருஷ்யையும், ஹரிகா காரிஸ்ஸா ஹிப்புடனும் மோதுகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai