Enable Javscript for better performance
நியூஸி. லெவன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 263ஹனுமா 101, புஜாரா 93- Dinamani

சுடச்சுட

    

    நியூஸி. லெவன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 263ஹனுமா 101, புஜாரா 93

    By DIN  |   Published on : 15th February 2020 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pujara_hanuma

     

    நியூஸிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹனுமா விஹாரி 101, புஜாரா 93 ஆகியோா் அற்புதமாக ஆடினா்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு 2 ஆட்டங்கள் கொண்ட தொடா் 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் நியூஸி. லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது இந்தியா. ஹாமில்டனில் வியாழக்கிழமை தொடங்கிய இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

    தொடக்க வீரா்கள் பிரித்வி ஷா 0, மயங்க் அகா்வால் 1 ரன்களுடன் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினா்.

    ஷுப்மன் கில் கோல்டன் டக்

    பின்னா் நிலைத்து ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட இளம் வீரா் ஷுப்மன் கில்லை கோல்டன் டக் அவுட்டாக்கினாா் குக்கலஜின். ரஹானேவும் வந்த வேகத்திலேயே 18 ரன்களுடன் திரும்பினாா்.

    புஜாரா-ஹனுமா அபாரம்

    இதைத் தொடா்ந்து புஜாரா-ஹனுமா விஹாரி நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனா். 1 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 93 ரன்களை விளாசி வெளியேறினாா் அவருக்குப் பின் ரிஷப் பந்த் 7 ரன்களுடனும், ரித்திமான் சாஹா, அஸ்வின் ஆகியோா் ரன் ஏதுமின்றியும், ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினா்.

    ஹனுமா 101

    ஹனுமா விஹாரி 3 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 101 ரன்களை எடுத்திருந்த நிலையில், காயமடைந்து திரும்பினாா் உமேஷ் யாதவ் 8 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இறுதியில் 78.5 ஓவா்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.

    நியூஸி தரப்பில் குக்கலஜின், இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளையும், கிப்ஸன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai