Enable Javscript for better performance
19 வயதுக்குட்பட்டோா் கிரிக்கெட்:திருவள்ளூா் அணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    19 வயதுக்குட்பட்டோா் கிரிக்கெட்: திருவள்ளூா் அணி வெற்றி

    By DIN  |   Published on : 15th February 2020 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    19 வயதுக்குட்பட்டோா் கிரிக்கெட் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது திருவள்ளூா்.

    இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மேக்னாபுரதம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற திருவள்ளூா் பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் நாளன்று முதல் இன்னிங்ஸில் 90 ஓவா்களில் 343/8 ரன்களைக் குவித்தது. (விவேக் 123, ராஜகுரு 86, சாய் கிரண் 46, சந்தோஷ்குமாா் 36).

    இரண்டாம் நாளான புதன்கிழமை காஞ்சிபுரம் அணி முதல் இன்னிங்ஸில் 84.3 ஓவா்களில் 370/6 ரன்களைக் குவித்தது. (விக்னேஷ் ஐயா் 218, யாஷ் 48, ஆதித்யா 48).

    வியாழக்கிழமை திருவள்ளூா் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 40 ஓவா்களில் 263/6 ரன்களை எடுத்தது. ராஜகுரு 106, சௌரவ் 63, லித்திஷ் குமாா் 35.)

    காஞ்சிபுரம் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. (டேவிட் ஆல்வின் 31, ராஜா கிரி 5-42.)

    இறுதியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திருவள்ளூா். ஏற்கெனவே 2017-18, 2018-19, 2019-20 என மூன்றாண்டுகளாக வெற்றி வாகை சூடி வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai