ரஞ்சி போட்டி: தொடர்ந்து 3-வது வருடமாகக் காலிறுதிக்குத் தகுதி பெறாத தமிழக அணி!

தமிழக அணி கடந்த மூன்று வருடங்களாகக் காலிறுதிக்குத் தகுதியடையாததால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
ரஞ்சி போட்டி: தொடர்ந்து 3-வது வருடமாகக் காலிறுதிக்குத் தகுதி பெறாத தமிழக அணி!

தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 424 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு செளராஷ்டிர அணி 368/8 என்கிற நிலையில் இருந்தபோது தமிழக அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 9-வது விக்கெட்டுக்கு உனாட்கட்டும் சிராக் ஜனியும் 74 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற உதவினார்கள். கடைசியில் செளராஷ்டிர அணி 9 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டம் டிரா ஆனது.

தமிழக அணி 8 ஆட்டங்களில் 20 புள்ளிகளுடன் 7-ம் இடம் பெற்று போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த வருடம் தமிழக அணி காலிறுதிக்குத் தகுதி பெறவில்லை. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற செளராஷ்டிர அணி, காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. 

முதல் 5 ஆட்டங்களில் தமிழக அணி 5 புள்ளிகளை மட்டுமே பெற்றதுதான் பெரிய பலவீனமாகிவிட்டது. எனினும் கடைசி இரு ஆட்டங்களில் ரயில்வே, பரோடா ஆகிய அணிகளுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. அந்த வெற்றிகள் காலிறுதிக்குத் தகுதியடைய போதுமானதாக இல்லை. ரஞ்சி போட்டியில் தமிழக அணி கடந்த மூன்று வருடங்களாகக் காலிறுதிக்குத் தகுதியடையாததால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள். 2017-ல் தமிழக அணி அரையுறுதிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதியில் மும்பையிடம் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com