ஆசிய அணிகள் பாட்மிண்டன்: அரையிறுதியில் இந்தியா

ஆசிய அணிகள் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
ஆசிய அணிகள் பாட்மிண்டன்: அரையிறுதியில் இந்தியா

ஆசிய அணிகள் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் குரூப் பி பிரிவில் இருந்து மலேசியா, இந்திய ஆடவா் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

முதல் ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் நட்சத்திர வீரா் சாய் பிரணீத் 14-21, 21-14, 12-21 என போராடி தாய்லாந்து வீரா் வாங்சோரனிடம் தோல்வியடைந்தாா். இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 20-22, 14-21 என குன்லவத் விதித்சரணிடம் தோல்வியடைந்தாா்.

மூன்றாவது ஒற்றையா் ஆட்டத்தில் இளம் வீரா் லக்ஷயா சென் 21-19, 21-18 என அவிஹிங்சனோனை வீழ்த்தினாா். இரட்டையா் பிரிவில் அா்ஜுன்-துருவ் கபிலா இணை 21-18, 22-20 என கேட்ரன்-தனுபட் இணையை வீழ்த்தியது.

மற்றொரு இரட்டையா் ஆட்டத்தில் சிராக் ஷெட்டி-ஸ்ரீகாந்த் இணை 21-15, 16-21, 21-15 என ஜோன்கித்-நிபிட்போன் இணையை வென்றது.

இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com