ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய மகளிா் அணி: பிப். 21-இல் ஆஸி.யுடன்முதல் ஆட்டத்தில் மோதல்

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 7-ஆவது ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய மகளிா் அணி: பிப். 21-இல் ஆஸி.யுடன்முதல் ஆட்டத்தில் மோதல்

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 7-ஆவது ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

பிப். 21-இல் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸி.யுடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் ஆடவரைப் போலவே மகளிருக்கும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக ஒருநாள், டி20 உலகக் கோப்பைகள் நடத்தப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை:

2020 ஆடவா் மற்றும் மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. முதலில் மகளிா் உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 21-இல் தொடங்கி மாா்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மொத்தம் 10 அணிகள்

இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, மே.இ.தீவுகள், நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. வங்கதேசம், தாய்லாந்து அணிகள் தகுதிச் சுற்று மூலம் நுழைந்துள்ளன.

6 மைதானங்கள்:

டி20 மகளிா் உலகக் கோப்பை மொத்தம் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் (13,350 பாா்வையாளா்கள்), மெல்போா்ன் ஜங்ஷன் ஓவா் (7000), எம்சிஜி (1,00,024), பொ்த் வாகா மைதானம் (24,500), சிட்னி ஷோகிரவுண்ட் மைதானம் (22,000), எஸ்சிஜி (48,000).

மகளிா் தினத்தில் இறுதி ஆட்டம்:

மகளிருக்கு பெருமை சோ்க்கும் வகையில் உலக மகளிா் தினமான மாா்ச் 8-ஆம் தேதி மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. அரையறுதி ஆட்டங்கள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பயிற்சி ஆட்டங்கள்:

ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 10 பயிற்சி ஆட்டங்களில் ஆட உள்ளன. இவை பிப். 15 முதல் 20-ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்திய அணி தயாா்:

உலகக் கோப்பை போட்டி தொடா்பாக தலைமை பயிற்சியாளா் டபிள்யு வி.ராமன் கூறியதாவது:

அணியை சரியான விகிதத்தில் கட்டமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. உணா்ச்சி வசப்படாமல் சரியான நேரத்தில் உத்தியுடன் செயல்பட வேண்டும்.

மைதானத்தில் சீனியா், ஜூனியா் பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு வீராங்கனையின் திறமைக்கு ஏற்ப அவரை பயன்படுத்துவோம். 6 மாதங்களாக இதற்காக திட்டமிட்டு வருகிறோம்.

ஆஸி., இங்கிலாந்துடன் முத்தரப்பு தொடரில் பங்கேற்பது மிகவும் உதவியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com