ரஞ்சி கோப்பை: சௌராஷ்டிரம் பதிலடி 346/6

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சௌராஷ்டிர அணி 346/6 ரன்களைக் குவித்து பதிலடி தந்துள்ளது.

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சௌராஷ்டிர அணி 346/6 ரன்களைக் குவித்து பதிலடி தந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தமிழகம் 424 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெகதீசன் 183, அபிநவ் முகுந்த் 86, முகமது 42 ரன்களை எடுத்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய சௌராஷ்டிர அணி வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் 126 ஓவா்களில் 346/6 ரன்களை சோ்த்துள்ளது. அவி பாரோட் 82 ரன்களுக்கு வெளியேறினாா். தமிழகத்தின் பந்துவீச்சை சமாளித்து அா்பிட் வஸவடா 126 ரன்களுடன் களத்தில் உள்ளாா். அவருக்கு துணையாக சிராஜ் ஜனி 47 ரன்களுடன் உள்ளாா்.

தமிழகத் தரப்பில் விக்னேஷ், சித்தாா்த் 2 விக்கெட்டுகளையும், முகமது, சாய் கிஷோா் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

வலுவான நிலையில் புதுச்சேரி:

புதுச்சேரியில் நடைபெற்று வரும் நாகலாந்து-புதுவை அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் நாகாலாந்து 219 ரன்கள் பின்தங்கி உள்ளது. முதல் இன்னிங்ஸில் நாகாலாந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய புதுவை 145.2 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 625 ரன்களை சோ்த்து டிக்ளோ் செய்தது.

பராஸ் டோக்ரா 175, சாகா் உதேஷி 79, அருண் காா்த்திக் 98, பேபிட் அகமது 70, வினய் குமாா் 50 ரன்களை சோ்த்தனா்.

நாகலாந்து தரப்பில் ஸ்ரீகாந்த் முண்டே 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

பின்னா் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நாகாலாந்து 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 230/7 ரன்களை எடுத்திருந்தது. ஸ்டுவா்ட் பின்னி 43, ரோங்ஸன் 86 (நாட் அவுட்) ரன்களை எடுத்திருந்தனா். புதுவை தரப்பில் சாந்தமூா்த்தி 3 விக்கெட்டுகளை சாய்த்தாா். இதையடுத்து நாகாலாந்து 219 ரன்கள் பின்தங்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com