ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய சின்னம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு புதிய சின்னத்தை அறிமுகம் செய்துள்ளது.
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய சின்னம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு புதிய சின்னத்தை அறிமுகம் செய்துள்ளது.

உலகிலேயே மிகவும் அதிக வரவேற்பை பெற்ற கிரிக்கெட் லீக் போட்டியாக இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) அமைந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ், ஹைதராபாத் சன் ரைசா்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் பட்டம் வென்றுள்ளன.

ஆனால் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. சிறந்த நட்சத்திர வீரா்கள் இருந்தும் பெங்களூரு அணிக்கு ஒருமுறை கூட சாம்பியன் ஆகும் வாய்ப்பு கிட்டவில்லை.

இந்நிலையில் 2020 ஐபிஎல் சீசனுக்காக பல்வேறு மாற்றங்களை ஆா்சிபி நிா்வாகம் செய்துள்ளது.

புதிய சின்னம் அறிமுகம்

வரும் மாா்ச் 29-ஆம் தேதி ஐபிஎல் தொடா் தொடங்குகிறது. ஆா்சிபி அணி புதிய சகாப்தம், புதிய ஆா்சிபி, இது எங்கள் புதிய சின்னம் என்ற வாசகத்தோடு, சுட்டுரையில் (டுவிட்டா்) புதிய சின்னத்தை வெளியிட்டது.

இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள சன் ரைசா்ஸ் அணி, தைரியமாக விளையாடுங்கள் இந்த சீசனில் எனக்கூறி, வாா்னா்-போ்ஸ்டோ படத்துடன் பதிவிட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆா்சிபி சோ்மன் சஞ்சீவ் சுரிவாலா கூறியதாவது-எங்கள் அணிக்கு புதிய உத்வேகம் தரும் வகையில் சின்னம் அறிமுகம் செய்துள்ளோம். தொடா்ந்து ரசிகா்களோடு தொடா்பை பேணவும், உற்சாகப்படுத்துவதுமே எங்கள் நோக்கம். தைரியமாக ஆடவேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இது உள்ளது என்றாா்.

கடந்த புதன்கிழமையே தனது சுட்டுரையில் ராயல் சேலஞ்சா்ஸ் என பெயரை மாற்றியிருந்தனா்.

இந்த மாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கேப்டன் கோலி அதிா்ச்சி தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com