ஏடிகேவை வீழ்த்தியது: ஐஎஸ்எல் போட்டியில் விஸ்வரூபம் எடுத்துள்ள சென்னை அணி! (விடியோ இணைப்பு)

அதன்பிறகு விளையாடிய 12 ஆட்டங்களில் 7-ல் வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது...
ஏடிகேவை வீழ்த்தியது: ஐஎஸ்எல் போட்டியில் விஸ்வரூபம் எடுத்துள்ள சென்னை அணி! (விடியோ இணைப்பு)

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் போட்டியின் பிளே ஆஃப் (அரையிறுதி) சுற்றுக்குத் தகுதி பெறும் முனைப்பில் உள்ளது முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி.

தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் போட்டியின் ஒரு கட்டமாக சென்னையின் எஃப்சி - ஏடிகே (கொல்கத்தா) ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி அட்டகாசமாக விளையாடி 3-1 என வென்று பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடி, 37,000 ரசிகர்களின் ஆதரவு இருந்தும் கொல்கத்தா அணியால் சென்னை அணியை வீழ்த்த முடியாமல் போனது. 

பிளேஆஃப் சுற்றுக்கு கோவா, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதியடைந்துள்ளன. மும்பை அணி 26 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே (சென்னைக்கு எதிராக) மீதமுள்ளது. ஆனால் சென்னை அணி மும்பை, வடகிழக்கு ஆகிய இரு அணிகளுக்கு எதிராக இரு ஆட்டங்கள் மீதமுள்ளன. இதனால் 25 புள்ளிகளுடன் உள்ள சென்னை அணி, மும்பை அணியைத் தாண்டிச் சென்று பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

பிப்ரவரி 21 அன்று மும்பைக்கு எதிராகவும் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 25 அன்று வடகிழக்கு அணிக்கு எதிராகவும் சென்னை அணி விளையாடவுள்ளது. முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்த சென்னை அணி, அதன்பிறகு விளையாடிய 12 ஆட்டங்களில் 7-ல் வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த வருடப் போட்டியில் சென்னை அணி தான் பல அணிகளின் திட்டங்களைக் கவிழ்த்து நம்பமுடியாத வகையில் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. அடுத்த இரு ஆட்டங்களில் சென்னையின் வெற்றி நடை தொடரவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

சென்னை - கொல்கத்தா ஆட்டத்தின் ஹைலைட்ஸ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com