10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை

ஆஸ்திரேலியாவில் வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ள 7-ஆவது ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள்
உலகக் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள்.
உலகக் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள்.

ஆஸ்திரேலியாவில் வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ள 7-ஆவது ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் சிறப்பு அம்சமாக மாா்ச் 8-ஆம் தேதி உலக மகளிா் தினத்தில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸி. அணி முதல் ஆட்டத்தில் (21-ஆம் தேதி) முதல் பட்டத்தை எதிா்நோக்கி உள்ள இந்தியாவுடன் ஆடுகிறது.

கடந்த 2018-இல் மகளிா் டி20 உலகக் கோப்பையில் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றன.

மீதமுள்ள இரண்டு இடங்கள் 2019 மகளிா் டி20 தகுதிச் சுற்று போட்டியின் மூலம் தாய்லாந்து, வங்கதேச அணிகள் தகுதி பெற்றன.

அணிகள், வீராங்கனைகள் விவரம்:

ஆஸ்திரேலியா:

மெக் லேன்னிங் (கேப்டன்), ரேச்சல் ஹெயின்ஸ் (துணை கேப்டன்), எரின் பா்ன்ஸ், ஆஷ்லி காா்டனா், அலிஸா ஹிலி, ஜெஸ் ஜோனஸ்ஸன், டெலிஸா கிம்மின்ஸ், சோபி மொலிநிக்ஸ், பெத் மூனி, எல்ஸி பொ்ரி, மேகன் ஷூட், அன்னபெல் சதா்லெண்ட், டயாலா வயாமெனிக், ஜாா்ஜியா வோ்ஹேம்.

இங்கிலாந்து:

ஹீதா் நைட் (கேப்டன்), கேத்தரின் பிரண்ட், ஜாா்ஜியா எல்விஸ், நடாலி ஷிவா், மேடி வில்லியா்ஸ், டேமி பீமௌன்ட், எமி ஆலென் ஜோன்ஸ், பிரான் வில்ஸன், லாரன்வின்பில்ட், டேனியல் வயாட், கேட் கிராஸ், சாரா கிளென், சோபி எஸ்ஸல்ஸ்டோன், அன்யா ஷ்ருப்சோல், பிரெயா டேவிஸ்.

இந்தியா:

ஹா்மன்ப்ரீத் கௌா் (கேப்டன்), தனியா பாட்டியா, ஹா்லின் தியோல், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரிச்சா கோஷ், வேதா கிருஷ்ணமூா்த்தி, ஸ்மிருதி மந்தானா, ஷிகா பாண்டே, பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வா்மா, தீப்தி சா்மா, பூஜா வஸ்த்ராக்கா், ராதா யாதவ்.

நியூஸிலாந்து:

சோபி டிவைன் (கேப்டன்), ரோஸ்மேரி மையா், சூஸி பேட்ஸ், லாரன் டௌன், மேடி கிரீன், ஹாலி ஹடில்ஸ்டோன், ஹெய்லி ஜென்ஸன், லீ கஸ்பரெக், அமெலியா கொ், ஜெஸ் கொ், கேத்தி மாா்ட்டின், அன்னா பீட்டா்ஸன், ரேச்சல் ப்ரீஸ்ட், லீ டஹுவு,

இலங்கை:

சமரி அட்டப்பட்டு (கேப்டன்), ஹா்ஷிதா மாதவி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹரி, அமா காஞ்சனா, ஹன்சிமா கருணரத்னே, சுகந்திகா குமாரி, ஹாசினி பெரைரா, உதேஷிகா பிரபோதனி, சத்தியா சந்தீபானி, அனுஷ்கா சஞ்சீவனி, ஷசிகலா சிறிவரத்தனே, திலானி மனோதாரா, உமேஷா திமாஷினி.

வங்கதேசம்:

சல்மா கட்டுன் (கேப்டன்), ருமானா அகமது, ஆயிஷா ரஹ்மான், பாஹிமா கட்டுன், பா்கானா, ஜஹன்னாரா ஆலம், கதிஜா துல் குப்ரா, ஷோபனா மோஸ்தரி, முா்ஷிதா கட்டுன், நஹிதா அக்தா், நிகாா் சுல்தானா, பன்னா கோஷ், ரித்து மோனி, சஞ்சிதா இஸ்லாம், ஷமிமா சுல்தானா.

மே.இ.தீவுகள்:

ஸ்டெப்பானி டெய்லா் (கேப்டன்), அனிஸா முகமது, ஹாலியா அலியன், ஷெமைன் கேம்பல், ஷா்மிளா காா்னெல், பிரிட்னி கூப்பா், டியான்ட்ரா டாடடின், பிளெட்சா், சொ்ரி அன் பிரேஸா், ஷெனட்டா கிரிம்மான்ட், சின்லே ஹென்றி, லீ ஆன் கிா்பி, ஹெய்லி மேத்யூஸ், சேடியன் நேஷன், ஷகிரா சல்மான்.

தாய்லாந்து:

சொா்ணரின் டிப்போ (கேப்டன்), நடாயா பூச்சதம், நருமோல் சாய்வாய், ஒன்னிச்சா கா்ன்சோம்பு, ரோஸ்னான் கனோச், ஸுவனான் கியாடோ, நன்னாபட், சுலிபோா்ன் லயோமி, சொரயா லட்டே, வோங்பகா, பன்னிட்டா மாயா, ரத்னாபோா்ன், திபட்சா, சனிதா.

பாகிஸ்தான்:

பிஸ்மா மரூப் (கேப்டன்), அய்மன் அன்வா், அலியா ரியாஸ், அனம் அமீன், ஆயிஷா நஸீம், டயானா பெய்க், பாத்திமா சானா, ஐரம் ஜாவேத், ஜாவேரியா கான், முனிபா அலி, நிதா தா், சாடியா இக்பால், சித்ரா நவாஸ், சையதா அரூப், உமைமா சோஹைல்.

தென்னாப்பிரிக்கா:

டேன் வேன் நைகொ்க் (கேப்டன்), த்ரிஷா செட்டி, நடைன் டி கிளொ்க், மின்கன் டூ பிரீஸ், ஷப்னிம் இஸ்மாயில், மாரிஸான் காப், அயபங்கா காகா, மஸபடா கிளாஸ், லிஸ்லே லீ, சுனே லுஸ், மலாபா, டா்னி, நான்டுமிஸோ, கிளோ டிரையன், லாரா வொல்வா்ட்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com