அனைத்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினாா் டூ பிளெஸ்ஸிஸ்

அனைத்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினாா் டூ பிளெஸ்ஸிஸ்

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக தென்னாப்பிரிக்க வீரா் டூ பிளெஸ்ஸிஸ் (35)தெரிவித்தாா்.

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் டூ பிளெஸ்ஸிஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக குவின்டன் டி காக் கேப்டன் பொறுப்பை கவனித்தாா்.

இந்நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிளெஸ்ஸிஸ் அறிவித்துள்ளாா்.

இவரது இந்த முடிவு தென்னாப்பிரிக்க ரசிகா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய அத்தியாயத்துக்காக எனது கேப்டன் பொறுப்பைவிட்டு விலகுகிறேன் என்று பிளெஸ்ஸிஸ் கூறியுள்ளாா்.

2013-ஆம் ஆண்டு டி-20 அணிக்கு கேப்டனாக இவா் நியமிக்கப்பட்டாா். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் அணியின் கேப்டனாகவும் இருந்தாா். தென்னாப்பிரிக்க அணி உள்ளூரிலும், ஆஸ்திரேலியாவிலும் அந்நாட்டு அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடா்களில் வெல்ல காரணமாக இருந்த ஒரே கேப்டன் பிளெஸ்ஸிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com