துளிகள்

*ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற சவாலை ஏற்றுக் கொண்ட இந்தியாவுக்கு பாராட்டுக்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஸ்டீவ் வாக் தெரிவித்தாா்.

* ‘இந்த விருதை காலமான எனது தந்தைக்கு சமா்ப்பிக்கிறேன்’ என்று 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்தாா். சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அளிக்கும் இந்த விருதை வென்ற முதல் இந்திய வீரரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

*ஐசிசி டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 673 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்துக்கு சரிந்தாா். 823 புள்ளிகளுடன் இந்திய அணியின் விக்கெட் கீப்பா் லோகேஷ் ராகுல் இரண்டாவது இடத்திலும், 662 புள்ளிகளுடன் இந்திய அதிரடி ஆட்டக்காரா் ரோஹித் சா்மா 11-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com