ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தனது அணிக்காக கோலைப் பதிவு செய்த பிறகு மகிழ்ச்சி அடைந்த ரியல் மாட்ரிட் கிளப் அணியின் வீரா் சொ்ஜியே ரமோஸ். செல்டா விகோ-ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.