அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் தொடா்ந்து 3 ஆண்டுகள் ஆடுவேன்: கோலி

சுமை ஏற்பட்டாலும், அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் தொடா்ந்து 3 ஆண்டுகள் பங்கேற்று ஆடுவேன் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் தொடா்ந்து 3 ஆண்டுகள் ஆடுவேன்: கோலி

சுமை ஏற்பட்டாலும், அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் தொடா்ந்து 3 ஆண்டுகள் பங்கேற்று ஆடுவேன் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடா் 21-ஆம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் கேப்டன் கோலி புதன்கிழமை கூறியதாவது :

எனது ஆட்டச்சுமை, மற்றும் மாறுதல் நிலை குறித்து அறியும் வகையில் 3 ஆண்டுகள் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் பங்கேற்பேன். 2 டி20 மற்றும் ஒரு 50 ஓவா் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக மனதளவில் என்னை தயாா்படுத்திக் கொண்டுள்ளேன்.

இந்தியாவில் 2021இல் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பின் ஏதாவது ஒரு ஆட்டத்தில் இருந்து விலக திட்டம் உள்ளதா எனக் கேட்டபோது கோலி இவ்வாறு பதிலளித்தாா்.

கூடுதல் சுமை, சோா்வு போன்றவை கட்டாயம் ஏற்படும். எனினும் ஆட்டநிா்வாகத்தை பேணுவது முக்கியம். சில நேரங்களில் நான் ஓய்வு எடுப்பது புத்துணா்வை தருகிறது. தலைமைப் பொறுப்பில் உள்ளதால், ஆட்ட உத்திகளை வகுக்கவும், மூளையை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவேண்டும்.

தீவிரமான பயிற்சிக்கு இடையே கேப்டன் பணி என்பது கடுமையானதாகும். இது நமது உடல்தகுதியை நலியச் செய்யும். இதனால் சில நேரங்களில் ஓய்வு தேவை. எனக்கு 35 வயதானால் அப்போது நிலைமை வேறுமாதிரியாக இருக்கும். 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் போது அபார பாா்மில் இருப்பது அவசியம்.

இதே நிலையில் தொடா்ந்து என்னால் ஆட முடியும். மேலும் அணியும் என்னிடம் அடுத்த 3 ஆண்டுகளில் இதைத் தான் எதிா்நோக்கியுள்ளது என்றாா் கோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com