முதல் டெஸ்ட்: வழக்கம்போல இந்திய அணி தடுமாற்றம்! முதல் நாள் முடிவில் 122/5

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
முதல் டெஸ்ட்: வழக்கம்போல இந்திய அணி தடுமாற்றம்! முதல் நாள் முடிவில் 122/5

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க மிகவும் தடுமாறினார்கள். பிரித்வி ஷா 16 ரன்களில் செளதி பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக புஜாரா, 11 ரன்களில் அறிமுக வீரர் ஜேமிசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக 7 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட விராட் கோலி, ஜேமிசன்னின் மற்றொரு அற்புதமான பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். இதன்பிறகு மயங்க் அகர்வாலும் ரஹானேவும் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்கள். 84 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால், மோசமான ஷாட்டால் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே போல நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஹாரியை 7 ரன்களில் வீழ்த்தினார் ஜேமிசன். தேநீர் இடைவேளைக்குப் பிறகு மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 38, ரிஷப் பந்த் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com