விளையாடச் சொன்னார்கள், விளையாடினேன்: ஜெட்லேக்கால் அவதிப்படும் இஷாந்த் சர்மா

நேற்றிரவும் என்னால் 40 நிமிடம் கூட தூங்கமுடியவில்லை. அதற்கு முந்தைய நாளில் மூன்று மணி நேரம் தான் தூங்கினேன்.
விளையாடச் சொன்னார்கள், விளையாடினேன்: ஜெட்லேக்கால் அவதிப்படும் இஷாந்த் சர்மா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-ம் நாளின் முடிவில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 71.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் ஷமி, அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள்.

2-ம் நாள் ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இஷாந்த் சர்மா கூறியதாவது:

கடந்த இரு நாள்களாக  நான் தூங்கவில்லை. இதனால் உடல் அசதியினால் இன்று மிகவும் சிரமப்பட்டேன். நான் விரும்பியதுபோல என்னால் இன்று பந்துவீச முடியவில்லை. என்னை விளையாடச் சொன்னார்கள். விளையாடினேன். அணிக்காக எதையும் செய்யத் தயார். 

என் பந்துவீச்சில் நான் திருப்தியடையாமல் இல்லை. நேற்றிரவும் என்னால் 40 நிமிடம் கூட தூங்கமுடியவில்லை. அதற்கு முந்தைய நாளில் மூன்று மணி நேரம் தான் தூங்கினேன். எனவே அசதியாக உள்ள என் உடல் மீது எனக்குத் திருப்தியாக இல்லை. 

ஜெட்லேக்கிலிருந்து எவ்வளவு சீக்கிரம் விடுபடுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் மைதானத்தில் உங்கள் உழைப்பைச் செலுத்த முடியும். நல்ல தூக்கத்தை விடவும் சிறந்தது வேறு இல்லை. நன்கு தூங்கினால் உற்சாகத்துடன் மைதானத்தில் பந்துவீசமுடியும். காயம் காரணமாக என்னால் ஆறு வாரங்கள் விளையாட முடியாது என்றார்கள். ஆனால் என்சிஏ-வில் கடுமையாக உழைத்து என்னை மீண்டும் டெஸ்டில் விளையாட வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com