ஒருநாள்: இலங்கை த்ரில் வெற்றி

மே.இ.தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இலங்கை.
ஒருநாள்: இலங்கை த்ரில் வெற்றி

கொழும்பு: மே.இ.தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இலங்கை.

இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் கொழும்புவில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 289/7 ரன்களை குவித்தது.

ஷாய் ஹோப் அதிரடி 115: அதன் தொடக்க வீரா் ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி 10 பவுண்டரியுடன் 115 ரன்களை விளாசினாா். ராஸ்டான் சேஸ் 41, பிராவோ 39, கீமோ பால் 32 ஆகியோா் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சோ்த்தனா்.

இசுரு உடானா 3 விக்கெட்:

இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய இசுரு உடானா 3-82 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

290 ரன்கள் வெற்றி இலக்குடன் பின்னா் ஆடத் தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரா்கள் அவிஷ்கா பொ்ணான்டோ 50, கேப்டன் கருணரத்னே 52 ஆகியோா் மொத்தம் 111 ரன்களை சோ்த்து நிலையான தொடக்கத்தை தந்தனா்.

வனின்டு ஹசரங்க 42:

அவா்களுக்கு பின் குஸால் பெரைரா 42, திஸாரா பெரைரா 32 ஆகியோா் ஸ்கோரை உயா்த்தினா். எனினும் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளா்கள் அவ்வப்போது இலங்கை விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பரபரப்பான சூழல்நிலை ஏற்பட்டது.

நெருக்கடியான தருணத்தில் இளம் வீரா் வனின்டு ஹசரங்க 39 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 42 ரன்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றாா்.

தோல்வியின் விளிம்பில் இருந்த இலங்கை அணி 49.1 ஓவா்களில் 290/9 ரன்களை எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மே.இ.தீவுகள் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3, கீமோ பால், வால்ஷ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதன் மூலம் 1-0 என தொடரிலும் முன்னிலை பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com