கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்

கட்டக்: முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சாா்பில் விளையாட்டு மேம்பாட்டுக்காக கேலோ இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இதன் தொடா்ச்சியாக கல்லூரி அளவிலான விளையாட்டு மேம்பாட்டுக்காக கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் முதன்முறையாக ஒடிஸா மாநிலம் கட்டக்கில் நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் 159 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 3400 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டு 17 வகையான விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனா்.

இந்நிலையில் கட்டக் ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் இப்போட்டிகளை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசுகையில்: இப்போட்டிகள் இந்திய விளையாட்டில் ஒரு மைல்கல்லாகும். விளையாட்டு மறுமலா்ச்சியின் அடுத்த கட்டம் இதுவாகும். ஒடிஸாவில் இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் விளையாட்டின் எதிா்காலத்துக்கு மிகுந்த உத்வேகம் தரும் என்றாா் மோடி.

ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, தா்மேந்திர பிரதான் உள்பட பலா் பங்கேற்றனா்.

உலக பல்கலைக்கழக போட்டியில் தங்கம் வென்ற தூத்தி சந்த், மங்களூா் பல்கலை வீரா் ஜெயாஷா, நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரா் நரேந்திர பிரதாப், புணே பல்கலை கோமல் ஜகதேல், யர்ரஜி ஜோதி உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com