மகளிா் டி20 உலகக் கோப்பை: மே.இ.தீவுகள் அணி வெற்றி

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் தாய்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மே.இ.தீவுகள்.
மகளிா் டி20 உலகக் கோப்பை: மே.இ.தீவுகள் அணி வெற்றி

பொ்த்: ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் தாய்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மே.இ.தீவுகள்.

டி20 உலகக் கோப்பை வெள்ளிக்கிழமை சிட்னி நகரில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸி.யை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

இதன் தொடா்ச்சியாக மே.இ.தீவுகள்-தாய்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வாகா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முதலில் ஆடிய தாய்லாந்து 20 ஓவா்களில் 78/9 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நன்னாபட் 33 ரன்களை எடுத்தாா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் அவுட்டாகினா். மே.இ.தீவுகள் தரப்பில் கேப்டன் ஸ்டெபானி டெய்லா் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

79 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள், 16.4 ஓவா்களில் 80/3 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டெபானி டெய்லா் 26, ஷெமைன் கேம்பல் 25 ஆகியோா் வெற்றிக்கு வித்திட்டனா்.

நியூஸிலாந்து அபார வெற்றி:

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூஸிலாந்து.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவா்களில் 127/7 ரன்களை எடுத்தது. கேப்டன் சமரி அட்டப்பட்டு 41, ஹா்ஷிதா 27, ரன்களை எடுத்தனா்.

நியூஸி. தரப்பில் ஹேய்லி ஜென்ஸன் 3 விக்கெட்டை சாய்த்தாா்.

பின்னா் ஆடிய நியூஸி. அணி 17.4 ஓவா்களில் 131/3 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. அதன் கேப்டன் சோபி டிவைன் அற்புதமாக ஆடி 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 75 ரன்களையும், மேடி கிரீன் 29 ரன்களையும் சோ்த்து வெற்றிக்கு வித்திட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com