குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை அணியில் லியாண்டர் பயஸ்!

குரோஷியா அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை அணியில் லியாண்டர் பயஸ்!

ஆசிய ஓசேனியா மண்டலம்-1 பிரிவுக்குட்பட்ட இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. இந்த வெற்றி மூலம் 2020 உலக தகுதிச் சுற்றுக்கு தேர்வானது.

மார்ச் மாதம் 6-7 தேதிகளில் உலகின் 2-ஆம் நிலை அணியான குரோஷியாவுடன் மோதுகிறது இந்தியா. 12 இடங்களுக்கு தகுதி பெற 24 அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வியுற்றும் 12 நாடுகள், செப்டம்பர் 2020-ல் நடக்கும் உலகப் பிரிவு-1 ஆட்டத்தில் மோதும். வெற்றி கண்ட இதர அணிகள், ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள கனடா, பிரிட்டன், ரஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், செர்பிய அணிகளுடன் இடம்பெறும்.

குரோஷியா அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இடம்பெற்றுள்ளார்கள்.

பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நாகல், ராம்குமாா் ராமநாதன் ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களிலும் லியாண்டா் பயஸ், ரோஹன் போபண்ணா ஆகியோர் இரட்டையர் ஆட்டங்களிலும் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திவிஜ் சரண் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

குரோஷியா அணி கடந்த 2018-ல் டேவிஸ் கோப்பைப் பட்டத்தை வென்றது. மேலும் சொந்த மண்ணில் அவா்கள் ஆட உள்ளதால் இந்திய அணிக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com